ஆவடி காவல் ஆணையரகத்தில் 6 கிலோ கஞ்சாவுடன் 3 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
புழல் ஏரி அருகில் கஞ்சா விற்பனை நடப்பதாக அம்பத்தூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் தனமாள் தலைமையில் தனிப்படை போலீசார் அது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். அதனையடுத்து சன்முகரம், மதுரா மேட்டுர், புழல் ஏரி அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த அருண் குமார் (21), செர்குரி பீட்டர் (20), அப்துல் கலாம் (20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 6 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.