Take a fresh look at your lifestyle.

ஆவடி காவல் ஆணையரகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

93

சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் சமத்துவப் பொங்கல் விழா கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் இன்று நடந்தது. இதில் ரங்கோலி, உரியடித்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பேசியதாவது,

‘‘பொங்கல் திருநாளை முன்னிட்டு இங்கு கூடியிருக்கும் காவல் சொந்தங்கள் அனை வருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள். இந்த இனிய தருணத்தில் காவல்துறைக்கு பல்வேறு இடைவிடாது பணிகள் இருந்தாலும், அதனையும் இன்முகத்துடன் மேற் கொண்டும், தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை சீறும் சிறப்புமாக கொண்டாட இங்கு அனைவரும் ஒன்றிணைந்து பொங்கல் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பங்காற்றியது மேலும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

புதியதாக தோற்றுவித்த ஆவடி காவல் ஆணையரகம், மிக சீரியமுறையில் பணியாற்றி மற்ற ஆணையரகங்களை காட்டிலும் முன்மாதிரியாக திகழ்கிறது. நாட்டிலேயே நமது ஆவடி காவல் ஆணையரகத்தினை புதியதாக உருவாக்கியும், அதற்கான கட்ட மைப் புகளை மிக விரைவாக செயல்படுத்திய தமிழக அரசிற்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் இந்த இனிய தருணத்தில் எனது தெரிவித்துக்கொள்கிறேன். ஆவடி காவல் ஆணையரகத்தில் பணியாற்றும் ஆயுதப்படை காவலர்களுக்கென கொண்ட 480 Barracks கட்டி 4 மாடிகள் காவலர்களின் பயன்பாட்டிற்காக தமிழக அரசு வழங்கியுள்ளது.

ஆவடி காவல் ஆணையரகத்தில் பணியாற்றும் காவலர்களுக்கென Avadi S.M. Nagar ல் புதியதாக 550 Police Quarters கட்டி நமது பயன்பாட்டிற்காக தமிழக அரசு வழங்கியுள்ளது. ஆவடி காவல் ஆணையரக ஆயுதப்படைக்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள நசரேத்பேட்டையில் 12.27 Hectare (30 Acres) நிலத்தினை தமிழக அரசு வழங்கியுள்ளது. மேலும் இந்த முத்தான தருணத்தில் நமக்கு பொங்கல் பரிசாக காவலர்களுக்கென Avadi S.M. Nagar ல் மண்டபத்தினை புதியதாக கட்டப்பட்ட திருமண தமிழக அரசு வழங்கி மேலும் நமக்கு எழுச்சியூட்டியுள்ளது.

தமிழக அரசின் உத்திரவின் படி காவலர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் ஓய்வு அளித்து சீரிய முறையில் நடைமுறை படுத்தப்பட்டு வரப்படுகிறது. காவலர் மற்றும் குடும்பத்தினருக்கு மருத்துவ முகாம் அமைத்து கண் சிகிச்சை மற்றும் முழு உடல் பரிசோதனை செய்யப் பட்டது. ஆவடி காவல் ஆணையரம் துவங்கப்பட்டு ஒரு வருடத்திற்குள்ளாகவே

 

முழுவதுமாக செயல்பட உறுதுணையாக இருந்து வரும் ஆவடி  காவல் ஆணைய ரகத்தில் பணியாற்றிவரும் காவல் அதிகாரிகளுக்கும், ஆளிநர்களுக்கும் எனது மனமார்ந்த
நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையில் அனைத்து வளங்களும், நலன்களும் அனைத்து மக்களுக்கு கிடைத்து இன்புற்று வாழ்வதற்கு ஆவடி காவல் ஆணையரகத்தின் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். “நன்றி” வணக்கம்”. இவ்வாறு சந்தீப்ராய் ரத்தோர் பேசினார்.