Take a fresh look at your lifestyle.

ஆவடி காவல் ஆணையரகத்தில் புறக்காவல் நிலையங்கள்: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் திறந்து வைத்தார்

81

சென்னை, ஆவடியில் புறக்காவல் நிலையங்களை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று திறந்து வைத்தார்.

ஆவடியில் புதிய கமிஷனரேட் கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்டது. போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் ஆவடி கமிஷனரேட்டை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக நேற்று ஆவடி காவல் ஆணையரக எல்லையில் உள்ள செங்குன்றம் காவல் மாவட்டம் சோழாவரம் காவல் நிலையத்திற்கு ட்பட்ட ஆட்டந்தங்கள் பகுதியில் புதிய புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார். அதனையடுத்து ஆவடி காவல் மாவட்டம் பூந்தமல்லி திருமழிசை மற்றும் அயப்பாக்கம் பகுதிகளில் நேற்று புறக்காவல் நிலையங்களை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியின் ஆவடி துணை கமிஷனர் மகேஷ் மற்றும் செங்குன்றம் துணைக்கமிஷனர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.