Take a fresh look at your lifestyle.

ஆவடி காவல் ஆணையரகத்தில் இ அலுவலகம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்

61

சென்னை பெருநகர காவல்துறை நிர்வாக வசதிக்காக முன்றாக பிரிக்கப்பட்டு 01.01.2022-முதல் ஆவடி காவல் ஆணையரகம் புதிதாக உருவாக்கப்பட்டு செயல்பட தொடங்கியது. ஆவடி காவல் ஆணையரகம் உதயமானது எண்ணற்ற நடவடிக்கைகள் அடித்தளமாக உருவாக்கப்பட்டு ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து ஆவடி காவல் ஆணையரகத்தில் புதிய வசதியாக E -Office அமைப்பை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவக்கி வைத்தார். தொப்பியில் உள்ள இறகு போல மின் அலுவலக அமைப்பை நடைமுறைபடுத்துவது மற்றும் மின் ஆலுமையை உறுதிபடுத்துவதற்கு இந்த வசதி அவசியமாக கருதப்படுகிறது. இது அன்றாட நடைமுறையில் கோப்பு கடித பறிமாற்றத்தை எளிதாக அணுக உதவும் செயலாக செயல்படுத்தப்படுவதாக ஆவடி கமிஷனரேட் தெரிவித்துள்ளது.