சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் 3 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுவோர் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மாங்காடு காவல்நிலைய வழிபறி, மற்றும் செயின் பறிப்பு வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் நொளம்பூரைச் சேர்ந்த விஜய் (29), நெற்குன்றம் படகோட்டி தமிழன் @ மணி (33), வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த விஜய் என்கிற பர்குணன் (24) ஆகியோர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளும்படி மாங்காடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோருக்கு பரிந்துரை செய்தனர். அதனை ஆய்வு செய்த கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து அதிரடி உத்தரவிட்டார். அதன் பேரில் அவர்கள் மூவரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆவடி காவல் ஆணையரகத்தில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 43 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.