Take a fresh look at your lifestyle.

ஆவடி காவல் ஆணையரகத்தில் போக்குவரத்து விதியை மீறியவர்களிடம் இருந்து ரூ. 19.97 லட்சம் அபராதம் வசூல்

65

சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ. 19.97 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் இருந்து வசூல் செய்யும் அபராதத் தொகையை அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களிடம் 100 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாகவும், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களிடம் 1000 ரூபாயில் இருந்து 10,000 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை கடந்த 21ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆவடியில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் இந்த போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகையை போலீசார் விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது விதித்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை முக்கிய சாலைகளில் சாலை வாகன இறப்பு வழக்குகள் 314 மற்றும் இறப்பு அல்லாத காய வழக்குகள் 972ஆக பதிவாகியுள்ளது. இந்த விபத்துக்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் 735, பாதசாரிகள் 217 பேர்கள் மற்றும் தனக்கு தானே விபத்து ஏற்படுத்திக் கொண்டவர்கள் 240 பேர் என புள்ளிவிவரக் கணக்குகள் பதிவாகியுள்ளன. பெரும்பாலும் இருசக்கர வாகனங்களே அதிகமாக விபத்துக்குள்ளாகியுள்ளது. 27.10.2022 ம் தேதி முதல் ஆவடி காவல் ஆணையரகத்துக் குட்பட்ட போக்குவரத்து காவல் அதிகாரிகளால் இதுவரை 2,631 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் அபராத தொகையாக 19 லட்சத்து 97 ஆயிரத்து 900 விதிக்கப்பட்டுள்ளதாக ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.