Take a fresh look at your lifestyle.

ஆவடி காவல் ஆணையரகத்தில் 2 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை

70

சென்னை ஆவடி காவல் ஆணைரகத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

ஆவடி காவல் ஆணையரகத்தில் குற்றங்களை குறைக்கும் பொருட்டு தொடர் குற்றங்களில் ஈடுபடுவோரை கண்காணித்து அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இந்த ஆண்டு இதுவரையில் 55 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னை, திருநின்றவூர் காவல் நிலைய கொலை கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட அயனம் பாக்கத்தைச் சேர்ந்த சரவணன் என்கிற ராவணன் (வயது 26), பாரத் (வயது 38) ஆகியோர் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடாத வண்ணம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருமுல்லை வாயல் இன்ஸ்பெக்டர் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஆய்வு செய்த கமிஷனர் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.