Take a fresh look at your lifestyle.

ஆவடி கமிஷனரேட்டில் டிஜிபி சைலேந்திரபாபு மனைவி பங்கேற்ற சர்வதேச பெண்கள் தின நிகழ்ச்சி

113

ஆவடி கமிஷனரேட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் மனைவிகள் சங்கம் சார்பில் நடந்த சர்வதேச பெண்கள் தின விழாவில் டிஜிபி சைலேந்திரபாபுவின் மனைவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சென்னை ஆவடி கமிஷனரேட் எஸ்எம் நகரில் நேற்று காவல்துறை சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ஐபிஎஸ் அதிகாரிகள் மனைவிகள் (IPSOWA) அசோசியேஷன் தலைவரும் டிஜிபி சைலேந்திரபாபுவின் மனைவியுமாகிய சோபியா சைலேந்திரபாபு இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மனைவி ஷில்பம் கபூர் கவுரவ விருந்திரனாக கலந்து கொண்டு சோபியா சைலேந்திரபாபுவை வரவேற்றார். பெண் காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பங்களுக்கு அப்பல்லோ மருத்துவமனை மற்றும் IPSOWA உடன் இணைந்து “சுகாதார பரிசோதனைதிட்டம்’’ நிகழ்ச்சி நடைபெற்றது. ரங்கோலி கோலப்போட்டி, சிலம்பம், சைலண்ட் டிரில் ஸ்கில் ஷோ மற்றும் பிரபல கலைஞர் வி.வி. பிரசன்னா மற்றும் திரை இசை பின்னனி பாடகர்கள் சிவாங்கி கிருஷ்ண குமார் இசை நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு விரிவுரையாளராக உஷா ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு “பணி வாழ்வு சமநிலை” (WORK LIFE BALANCE) என்ற தலைப்பில் ஆவடி காவல் ஆணையரகத்தின் பெண் காவலர்களுக்கான நல்வாழ்வு பயிற்சி வகுப்பை துவங்கி வைத்தார். இவ்விழாவில் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.