Take a fresh look at your lifestyle.

ஆவடியில் 6 பேர் மீது குண்டர் சட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை

77

ஆவடி கமிஷனரேட்டில் ரவுடிகள் 6 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆவடி கமிஷனரேட்டில் தொடர்ந்து குற்ற வழக்குகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி சென்னை அம்பத்தூர் மற்றும் சாத்தங்காடு காவல் நிலையங்களில் கொலை மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பிரபு என்கிற நடமா பிரபு என்கிற

சிவதாசன், திருவொற்றியூரைச் சேர்ந்த சரத்குமார் என்கிற அப்பு, மீஞ்சூரைச் சேர்ந்த பசுபதி, சேதுமாதவன், வண்ணாரப்பேட்டை முத்து, அம்பத்தூர் கல்யாணராமன் ஆகிய 6 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். ஆவடி கமிஷனரேட் தொடங்கி இன்று வரை மொத்தம் 147 ரவுடிகள் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.