Take a fresh look at your lifestyle.

ஆவடியில் விபசார கும்பல் கைது: இளம்பெண்கள் மீட்பு

97

சென்னை, கொரட்டூர் பகுதியில் உள்ள வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் ஆவடி மத்திய குற்றப்பிரிவு துணைக்கமிஷனர் பெருமாள் மேற்பார்வையில் விபசாரத் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் மல்லிகா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது கொரட்டூரில் சம்பந்தப்பட்ட வீட்டில் விபசாரம் நடப்பது உறுதியானது. அதனையடுத்து அங்கு விபசாரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த இளம் பெண்கள் இருவரை போலீசார் மீட்டனர். விபசார விடுதியை நடத்தி வந்த கலை (எ) கல்யாணி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் கொரட்டூரில் உள்ள நியூ கோல்டன் ஸ்டார் கெஸ்ட் ஹவுஸை லீசுக்கு அங்கு அடைத்து வைத்து எடுத்து வெளி மாநில பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வரும் மேற்கு முகப்பேரை சேர்ந்த ராஜேஷ் (40) மற்றும் ராஜேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்குள்ள கெஸ்ட் ஹவுசில் அடைத்து வைத்திருந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட நபர்கள் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட பெண்கள் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.