சென்னை, அக். 2–
சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் போதை ஒழிப்புக்கான மாரத்தான் ஓட்டப்பந்தய நிகழ்ச்சியை டிஜிபி சைலேந்திரபாபு துவங்கி வைக்கிறார்.
சென்னை ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக போதை ஒழிப்புக்கான இரவு மாரத்தான் ஓட்டப்பந்தய நிகழ்வு இன்று நடக்கிறது. ஆவடி கமிஷனர் சந்திப்ராய் ரத்தோர் தலைமையில் நடக்கும் இந்நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு கொடி அசைத்து துவங்கி வைக்கிறார்.
நாளை (02.10.2022) மாலை 7 மணியளவில் ஆவடி, வேல்டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர் அண்ட் டி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் இருந்து முதற்கட்ட மாரத்தான் ஓட்டப்பந்தயம் துவங்குகிறது.