ஆழ்வார்திருநகரியில் சம்சுதீன் (ரழி), பக்கீர்பாவா (ரழி) தர்காக்களில் நாளை வருடாந்திர கந்தூரி உரூஸ் விழா விமரிசையாக நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருகரி, அழகியமணவாளபுரம் பகுதியில் தெக்கூரில் சம்சுதீன் (ரழி) தர்காவும், வடக்கூரில் பக்கீர்பாவா (ரழி) தர்காவும் மிகவும் பிரசித்தி பெற்ற வைகளாகும். ஆண்டுதோறும் இஸ்லாமிய மாதமான ரஜபு பிறை 8 மற்றும் 9 ஆகிய நாட்க ளில் யானை மீது கொடி ஊர்வலத்துடன் கந்தூரி விழா விமரிசையாக நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டின் கந்தூரி விழா நாளை 31.1.2023 மற்றும் 01.02. 2023 ஆகிய தேதிகளில் விமரிசையாக நடைபெறுகிறது.
1ம் தேதியன்று மகான் பக்கீர்பாவா தர்காவின் புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி நடக்கிறது. ராமநாதபுரம், கீழக்கரை, அரூஸிய்யா அரபிக்கல்லூரியின் முதல் வரும், ஏர்வாடி தர்காவின் மூத்த டிரஸ்டியுமான மவுலவி அப்ஸலுல் உலமா அல்ஹாஜ் ஸலாஹுத்தீன் ஆலிம் ஜமாலி பாஜில் உமரி, பக்கீர் பாவா தர்காவின் புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
மேலும் ராமநாதபுரம் அரசு காஜியின் சிறப்பு பிரார்த்தனையுடன் இந்நிகழ்ச்சி துவங் குகிறது. விழா ஏற்பாடு களை கந்தூரி கமிட்டி நிர்வாகிகள் ஆழ்வை ஐக்கிய முஸ்லிம் ஜமாத் தலைவர் ஹாஜி ஏ. ஹமீது அப்பாஸ், செயலாளர் கே. லாபிர் மற்றும் அய்யுப், அபுபக்கர், ஹாஜி எம். எச். ஜவாஹிர் அலி ஆகியோர் செய்துள்ளனர்.