Take a fresh look at your lifestyle.

ஆயுதப்படை காவலர்களின் தேவையை நிறைவேற்றி வைத்த கமிஷனர் சங்கர்ஜிவால்

Shankar Jiwal IPS opened new sbi Atm in mount AR campus

98

சென்னை புனிததோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலரின் வேண்டுகோளுக்கிணங்க புதிதாக அமைக்கப்பட்டுள்ள ATM சென்டரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் காவலர்களின் நலனுக்காக பல்லேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காவல் ஆளிநர்கள், அதிகாரிகள் பிறந்த நாள் அன்று அவர்களை நேரில் அழைத்து வாழ்த்து செய்தியுடன் கையொப்பமிட்ட பிறந்த நாள் வாழ்த்து அட்டையும், ஒரு பரிசு பொருளையும் வழங்குவதையும் கமிஷனர் சங்கர்ஜிவால் வழக்கமாக கொண்டுள்ளார்.

அத்துடன் அவர்களது பணி மற்றும் குடும்பத்தை பற்றி விசாரித்து குறைகளை கேட்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு சங்கர்ஜிவால் உத்தரவு பிறப்பித்து வருகிறார். அதனடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிறந்த நாள் வாழ்த்து பெறுவதற்காக காவல் ஆணையாளரை சந்தித்த ஆயுதப்படை காவலர் பிரேம்குமார் என்பவர், புனித தோமையர் ஆயுதப்படை வளாகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த தனியார் வங்கியின் ATM சென்டர் அவ்வங்கியின் மூலமாக சரியாக பராமரிக்கப்படாமல் செயல்பாட்டில் இல்லாமல் இருந்ததால் மூடப்பட்டிருப்பதாகவும், காவலர்களின் வசதிக்காக புதிதாக ATM சென்டர் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தார்.

அதன்பேரில் புனிததோமையர் மலை, ஆயுதப்படை-2 அலுவலக வளாகத்தில் காவல் ஆளிநர்கள் மற்றும் இதர பணிகளுக்காக வரும் பொதுமக்களின் வசதிக்காக புதிதாக பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு ATM இயந்திரம் பொருத்தப்பட்டிருந்தாலும், தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாக 2வது ATM இயந்திரம் வைப்பதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர மேற்படி ATM சென்டரில் சி.சி.டி.வி கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனை கமிஷனர் சங்கர்ஜிவால் இன்று (30.06.2022) குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) லோகநாதன், இ.கா.ப, ஆயுதப்படை துணை ஆணையாளர்கள், பாரத ஸ்டேட் வங்கி உயர் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.