Take a fresh look at your lifestyle.

ஆயிரம் விளக்கில் கட்டடம் இடிந்து விழுந்து பெண் பொறியாளர் பலி

64

ஆயிரம் விளக்கு, அண்ணாசாலையில் பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய கட்டிடம் இடிந்து விழுந்து சாலையில் நடந்து சென்ற பெண் மீது விழுந்ததில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

சென்னை ஆயிரம் விளக்கு, அண்ணா சாலையில் மசூதி அருகே கிரீம்ஸ் சாலை செல்லக் கூடிய வழியில் உள்ள பயன்படுத்தப்படாத கட்டிடத்தை இடிக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடந்து வந்தது. இந்நிலையில், இன்று காலை அந்த கட்டிடத்தை ஜேசிபி இயந்திர த்தைக் கொண்டு இடிக்கும் பணி நடைபெற்றுள்ளது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இந்தப் பணி நடைபெற்று வந்துள்ளது. சென்னையின் பிரதான சாலை என்பதால், இன்று காலை அந்த பகுதியில் பணிக்குச் செல்வோர், வாகன ஓட்டிகள், அரசுப் பேருந்துகள் என பலரும் அந்த சாலையில் பயணித்து வந்தனர். அப்போது திடீரென அந்த பழைய கட்டிடம் தானாகவே இடிந்து விழுந் தது. காலையில் வேலைக்காக சென்று கொண்டிருந்தவர்களின் மீது கட்டிட இடிபாடுகள் விழுந்தது. இதில் சிலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் கிடைத் ததும் தீயணைப்புப்படையில் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர்.

2 பெண்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அதில் மதுரையைச் சேர்ந்த பொறியாளர் பத்மப் பிரியா என்பவர் சிகிச்சை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மீட்பு பணியில் தீய ணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த கட்டிட விபத்தினால் அண்ணாசாலை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.