Take a fresh look at your lifestyle.

ஆன்லைன் ரம்மியில் கல்லூரி கட்டணத்தை தொலைத்த எம்பிஏ மாணவர் மாயம்

63

கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக கொடுத்த பணத்தை ஆன்லைன் ரம்மி விளை யாட்டில் இழந்த கல்லூரி மாணவர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு நேற்று மாலை முதல் காணவில்லை என புகார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் திவாரி. சென்னை ராமாபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார், இந்நிலையில் கல்லூரி கட்டணத்திற்காக தனது தந்தை கொடுத்த ரூ. 20 ஆயிரம் பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்துள்ளார். மீண்டும் தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை மாணவனை திட்டியுள்ளார். இதனையடுத்து நேற்று மாலை முதல் சரத்குமார் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு விடுதிக்கும் வராமல் எங்கு சென்றார் என தெரியவில்லை என அவரது தந்தை போன் மூலம் ராயலா நகர் போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.