நடிகை ஐஸ்வர்யா ராய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடியுள்ள நிலையில், கொள்ளை அழகில் ஜொலிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கர்நாடகாவில் பிறந்த ஐஸ்வர்யா ராய் 1994ம் ஆண்டு உலக அழகி பட்டத்தினை வென்றார்.
பின்பு கோலிவுட், பாலிவுட்டில் அறிமுகமாகிய இவர் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். மேலும் ஜீன்ஸ் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த இவர் பல விருதுகளையும் பெற்றார்.
இதை தொடர்ந்து பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திலும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவர் பிறந்த நாளின் போது சிவப்பு நிற ஆடை அணிந்தது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.