உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந் நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலினுடன் இணை ந்து நடிகர் சூரி பார்த்து ரசித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உலகப் புகழ் பெற்ற நம் பாரம்பரிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை அன்பிற் கினிய சகோதரர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுடனும் மற்றும் மற்ற மதிப்பிற்குரிய அமைச்சர்கள், அதிகாரி களுடனும் கண்டு களித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி ! வீரம் நிறைந்த மண்” என்று பதிவிட்டு புகைப் படங்க ளையும் பகிர்ந்துள்ளார்.