Take a fresh look at your lifestyle.

அறிவுசார் குறைபாடு குழந்தைகளுக்கான மராத்தான் நடை பயணம்: கமிஷனர் சங்கர்ஜிவால் துவங்கி வைத்தார்

125

உலக ஆட்டிசம் நாளை (World Autism Day) முன்னிட்டு, சென்னை பெசன்ட்நகர் பகுதியில், அறிவுசார் குறைபாடு உள்ள குழந்தைகள் (Children with Intellectual disabilities) மற்றும் அவரது பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் நடைபயணத்தை துவக்கி வைத்து பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார்.

உலக ஆட்டிசம் நாளை (World Autism Day) முன்னிட்டு இன்று (9.04.2022) காலை, பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரை அருகில், சாக்‌ஷம் மற்றும் மனுஷ்ய பிளாஸ்சம் பல்நோக்கு சித்த மருத்துவமனை (Saksham and Manushya Blossom Multi Speciality Siddha Clinic) சார்பில், அறிவுசார் குறைபாடு உள்ள குழந்தைகள் (Children with Intellectual Disabilities) மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் நடைபயணம் நடந்தது.

இதனை கமிஷனர் சங்கர்ஜிவால் துவக்கி வைத்தார். மேலும் விழிப்புணர்வு நடைபயணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெயச்சந்திரன் மற்றும் அம்பேத்கர் சட்ட பல்கலைகழக துணை வேந்தர் Dr. N.S.சந்தோஷ்குமார் உட்பட சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.