Take a fresh look at your lifestyle.

அரபிக்குத்து பாடலுக்கு நடனம் ஆடிய கேத்ரினா கைப்

kathreena kaif dancing with beast song

87

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை கத்ரீனா கைப். இவருக்கும் பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசலுக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது, திருமணத்திற்கு பின்பும் நடிகை கத்ரீனா கைஃப் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதியுடன் மெரி கிறிஸ்துமஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்ற அரபிக் குத்து பாடலுக்கு நடிகை கத்ரீனா கைஃப் நடனமாடும் வீடியோ வைரலாகியுள்ளது. மதுரையில் நடந்த பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ள கத்ரீனா அங்குதான் குழந்தைகளுடன் இந்த நடனத்தை ஆடியுள்ளார்.