Take a fresh look at your lifestyle.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு செல்லும்: சென்னை ஐகோர்ட்

1,510

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் முந்தைய அதிமுக அரசில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இந்த விசாரணை நடந்து வந்தது. மார்ச் 17-ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்திருந்தனர்.

இந்த வழக்குகளில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்தனர். தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லுபடியாகும். இந்த உள் ஒதுக்கீட்டை வழங்குவதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே மருத்துவ படிப்புகளில் தொடர்ந்து 7.5 சதவீத உள் ஒதுக்கீடு நடைமுறையை தொடரலாம். 5 ஆண்டுகளுக்கு பிறகு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு நடைமுறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தலாமா? என்று மறு ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.