தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்ரேஷன் லிமிடெட்டின் நிர்வாகப்பிரிவு பொது மேலாளர் கமிஷனர் சங்கர்ஜிவாலிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘‘பாலாஜி மெஷின் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மந்த்ரா இண்டஸ்டிரிஸ் லிமிடெட் நிறுவனங்களுக்கும், தங்களது அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்குமிடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி செட்டாப் பாக்சுகளை கொள்முதல் செய்து பராமரித்து வந்தனர்.
அந்த இரண்டு நிறுவனங்களின் சார்பாக ராஜன் என்பவர் மேற்பார்வை செய்து வந்தார். இந்நிலையில் மேற்படி செட்டாப் பாக்சுகளின் மென்பொருளை ராஜன் செயலிழக்க செய்துள்ளார். அவர் மீது தக்க நடவடிக்கை வேண்டும்’’ இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார். இது தொடர்பாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ராஜன் TACTV அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் CAS & SMS சர்வர்களில் அனுமதியின்றி செட்டாப் பாக்சுகளின் மென்பொருளை செயலிழக்கச்செய்தது தெரியவந்தது. அதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.