நீதிமன்ற விசாரணை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு உறுதியான தண்டனை பெற்றுத் தருதல் தொடர்பாக காவல் அதிகாரிகள் மற்றும் அரசு குற்றவியல் வழக்குரைஞர்களுடன் கமிஷனர் சங்கர்ஜிவால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை பெருநகர காவல் நிலையங்களில் பதிவான வழக்குகள் தொடர்பாக நீதிமன்ற வழக்குகளை விரைந்து விசாரணை செய்து முடிப்பது தொடர்பாகவும், குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்று தருவது தொடர் பாகவும் கமிஷனர் சங்கர்ஜிவால் அரசு வழக் குறைஞர்களுடன் நேற்று கலந்தாய்வு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டது.
இந்தக் கூட்டத் தில் காவல் அதிகாரிகள் மற்றும் அரசு குற்றவியல் வழக்கு தொடர்புதுறை துணை இயக்கு நர் முருகன் மற்றும் தேவராஜன், சென்னை, அரசு வழக்குரைஞர் மற்றும் எழும்பூர், சைதாப் பேட்டை, ஜார்ஜ் டவுன், பூந்தமல்லி, திருவள்ளூர் ஆகிய குற்றவியல் நீதி மன்றம், அமர்வு நீதிமன்றம், விரைவு நீதிமன்ற அரசு வழக்குரைஞர்கள், கூடுதல் அரசு வழ க்குரைஞர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கலந்தாய்வில், நீதிமன்றத்தில் நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள வழக்குகளின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான வழிகள் ஆராயப்பட்டும், சாட்சிகள் விசாரணை மேம்படுத் துதல், பிடிக்கட்டளைகளை நிறைவேற்றுதல், அரசு சாட்சிகள் நீதிமன்றத்தில் விரைந்து விசாரணை செய்தல், பிணை உத்தரவு ரத்து செய்ய முறையான பதிவு செய்தல் மற்றும் இதர நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்க ஆவண செய்தல், வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு உறுதியான தண்டனை பெற்று தருதல் குறித்தும் ஆலோசி க்கப்பட்டது. வழக்குகளை கையாளும் காவல் விசாரணை அதிகாரி களுக்கு விரைந்து முடிப்பதற்கான பல அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, கபில் குமார் சி. சரத்கர், அன்பு, மகேஷ்வரி அனைத்து இணை ஆணையாளர்கள், அனைத்து துணை ஆணையாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.