கலிபோர்னியா
அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியா, அயோவா, சான் பிரான்சிஸ்கோ உள்பட 3 இடங்களில் நடந்த வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 2 மாணவகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். பள்ளிக்கூட ஊழியர் ஒருவர் உயிருக்குப் போராடி வருகிறார். கலி போர்னியாவில் ஒரு காளான் பண்ணையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப் பட்டனர். அதே போல் சான் பிரான்சிஸ்கோ தெற்கே ஒரு கடலோர பகுதியில் ட்ரக்கிங் மையத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இது தவிர அயோவாவில் நடந்த இன்னொரு சம்பவத்தில் 2 மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடந்த இடங்களுக்குள் ஏதேனும் ஒற்றுமை, தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த சனிக்கிழமை கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மான்டெரி பார்க் நகரில் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள இங்கு, ஆயிரக்கணக்கானோர் ஒன்றாகக்கூடி சீன புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருந்தபோது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது 3 வெவ்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.