Take a fresh look at your lifestyle.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாஜகவே வெற்றி பெறும்: குஜராத்தில் பிரதமர் மோடி பிரசாரம்

68

குஜராத் தேர்தலில் பாஜக அனைத்து வாக்குச் சாவடியிலும் வெற்றி பெறுவதே எனது இலக்கு என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

குஜராத் சட்டப்பேரவையில் உள்ள 182 தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகியவை தேர்தல் களத்தில் உள்ளன. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கிர் சோம்நாத் மாவட்டம் வெராவல் தொகுதியில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் இன்று பேசிய பிரதமர் மோடி, ‘‘பாஜக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வெற்றி பெறுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இதை நீங்கள் எனக்காக செய்வீர்களா? இந்த 4 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று அவர்கள் சட்டப்பேரவைக்கு செல்வதை உறுதி செய்யுங்கள். இந்த முறை எனது இலக்கு எல்லா வாக்குச்சாவடிகளிலும் பாஜகவே வெற்றி பெற வேண்டும் என்பதே” என்றார்.