Take a fresh look at your lifestyle.

அனாதை இல்லத்தில் தங்கியிருந்த மனநலம் பாதித்த வாலிபரை 7 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் சேர்த்த இன்ஸ்பெக்டர் தாஹிரா

63

கேரளாவைச் சேர்ந்த அஜி என்ற 35 வயது மனநலம் பாதிப்படைந்த வாலிபர் ஒருவர் சென்னையை அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள ஈஸ்ட் ஈடன் பவுண்டேஷன் என்ற மனநலம் மற்றும் அனாதை இல்லத்தில் இருந்தார். கேரளாவில் இருந்து காணாமல் போன அவர் மனநலம் பாதிப்படைந்ததால் தனது குடும்பம் எங்கு உள்ளனர் என்பது பற்றி எந்த தகவலும் சொல்ல தெரியவில்லை. அவர் அனாதை இல்லத்தில் காப்பகத்தில் பாதுகாப்பில்
இருந்தார். கடந்த 2015ம் ஆண்டில் இருந்து அந்த இல்லத்தில் அவர் வசித்து வந்தார்.

இந்நிலையில் மாநில குற்ற ஆவணக்காப்பக கூடுதல் டிஜிபி வினித்தேவ் வாங்கடே உத்தரவின் பேரில் சென்னை மற்றும் அதன் புறநகர்களில் உள்ள அனாதை இல்லம் மனநலபாதிப்படைந்தோர் உள்ள இல்லங்களில் காணாமல் போய் ஆதரவு தேடி வந்தவர்களின் உறவினர்களை கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைக்கும் பணியை க்ரைம் ரெக்கார்டு பீரோ காவல்துறையினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் மாநில குற்ற ஆவணக்காப்பக இன்ஸ்பெக்டர் தாஹிரா கொளப்பாக்கத்தில் உள்ள ஈஸ்ட் ஈடன் காப்பகத்துக்கு விசிட்டுக்காக சென்ற போது அங்கு வாலிபர் அஜி தனது குடும்பத்தை பிரிந்து கடந்த 7 ஆண்டுகளாக அங்கு தங்கியிருப்பது தெரியவந்தது. அதனையடுத்து அந்த வாலிபரிடம் இன்ஸ்பெக்டர் பேச்சு கொடுத்தத போது அவர் சில தகவல்களை அளித்தார்.

அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் தாஹிரா விசாரணை நடத்தினார். இதில் வாலிபர் அஜியின் குடும்பம் கேரளா திருவனந்தபுரம் மாவட்டம், நெய்யாட்டின்கரை பகுதியில் வசித்து வருவது தெரியவந்தது. அதனையடுத்து அங்குள்ள அஜியின் உறவினர்களுக்கு அவர் சென்னை கொளப்பாக்கத்தில் அனாதை இல்லத்தில் இருப்பதை தெரியப் படுத்தினர். அதனையடுத்து அவர்களும் விரைந்து வந்தனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் தாஹிரா வாலிபர் அஜியை ஒப்படைத்தார். 7 ஆண்டுகளுக்கு பிறகு வாலிபர் அஜி கிடைத்ததை கண்ட அவர்கள் காவல்துறைக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். மாநில குற்ற ஆவணக்காப்பக இன்ஸ்பெக்டர் தாஹிராவின் இந்த மனிதநேய செயல் அனைவர் மத்தியிலும் பாராட்ட வைத்துள்ளது.