Take a fresh look at your lifestyle.

அசாமில் இளம்பெண்ணிடம் ரூ. 168 கோடி போதை பொருட்கள் பறிமுதல்

75

அசாம் மாநிலம் மிசோராமில் ரைபிள் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில் ரூ.167 கோடியே 86 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மிசோரமின் சாம்பை மாவட்டத்தில் மெல்புக் கிராமத்தில் அசாம் ரைபிள் படை மற்றும் ஜொக்காவ்தர் போலீசார் கூட்டாக இணைந்து, ரகசிய தகவலின் அடிப்படையில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் பெண் ஒருவர் அந்த பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், அவரிடம் 55. 80 கிலோ எடை கொண்ட 5.05 லட்சம் போதை பொருட்கள் அடங்கிய மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் சந்தை மதிப்பு ரூ167.86 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், பெண்ணையும் கைது செய்தனர்.

இதுவரை நடந்த அதிரடி சோதனை வேட்டையில் இந்த அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல் தடவையாகும். கடந்த 3 ஆண்டுகளில் அசாம் ரைபிள் படை நடத்தி வந்திருக்கும் வேட்டையில் ரூ.200 கோடி மதிப்பிலான போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.