Take a fresh look at your lifestyle.

அகில இந்திய விரல்ரேகை நிபுணர் தேர்வில் 2வது இடம்: சென்னை நகர சப் இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் பாராட்டு

87

அகில இந்திய விரல்ரேகை நிபுணர் தேர்வில் 2ம் இடம் பிடித்த சென்னை பெருநகர காவல் விரல்ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் கார்த்திக் அழகனை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார்.

தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) 08.11.2022 முதல் 13.11.2022 வரை தில்லியில் நடத்திய அகில இந்திய விரல்ரேகை நிபுணர் தேர்வில் (All India Finger Print Board Exam), தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 233 நபர்கள் கலந்து கொண்டனர். இத்தேர்வில், சென்னை பெருநகர காவல், புனித தோமையர்மலை விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் கார்த்திக் அழகன் கலந்து கொண்டு, 214 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடம் பிடித்து சென்னை பெருநகர காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரை கமிஷனர் சங்கர்ஜிவால் இன்று (1.12.2022) நேரில் அழைத்து பாராட்டினார். அவருடன் புனித தோமையார் மலை விரல்ரேகை பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் கலைகண்ணகி உடனிருந்தார்.