Take a fresh look at your lifestyle.

அகில இந்திய அளவில் வெற்றி பெற்ற சென்னை குதிரைப்படைக்கு கமிஷனர் பாராட்டு

90

40வது அகில இந்திய காவல்‌ குதிரைப்படையினருக்கான குதிரையேற்ற போட்டியில்‌
கலந்து கொண்டு வெற்றி பெற்ற சென்னை பெருநகர காவல்‌ குதிரைப்படை காவல்‌ ஆளிநர்களை கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில்‌ அழைத்து பாராட்டினார்‌.

கடந்த 02.04.2022 முதல்‌ 11.04.2022 வரை, ஹரியானா மாநிலம்‌, பஞ்ச்குலா, பானு,
ஈம்‌ வளாகத்தில்‌ நடைபெற்ற 40வது அகில இந்திய அளவிலான காவல்‌ துறை
குதிரைப்படையினருக்கான குதிரையேற்ற போட்டியில்‌ சென்னை பெருநகர காவல்‌
குதிரைப்படை வீரர்கள்‌ கலந்து கொண்டு 3 தங்கப்பதக்கம்‌, 2 வெள்ளிப்பதக்கம்‌,
1 டவைண்கலப்பதக்கம்‌ என மொத்தம்‌ 6 பதக்கங்களையும்‌, 4 கேடயங்களையும்‌
பெற்றுள்ளனர்‌.

சென்னை பெருநகர காவல்‌ ஆணையாளர்‌ சங்கர்‌ ஜிவால்
இன்று (18.04.2022) காலை அகில இந்திய அளவிலான காவல்‌ துறை
குதிரைப்படையினருக்கான சூதிரையேற்ற போட்டிகளில்‌ கலந்து கொண்டு வெற்றி
பெற்ற சென்னை பெருநகர காவல்‌, குதிரைப்படை காவல்‌ ஆளிநர்களை நேரில்‌
அழைத்து பாராட்டி குழு புகைப்படம்‌ எடுத்துக்‌ கொண்டார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ கூடுதல்‌
ஆணையாளர்‌ (தலைமையிடம்‌) மம்லோகநாதன்‌, இணை ஆணையாளர்‌
(தலைமையிடம்‌) சாமுண்டீஸ்வரி, தமிழ்நாடு சிறப்பு காவல்‌ படை
6ம்‌ அணி தளவாய்‌ தேஷ்முக்‌ சேகர்‌ சஞ்சய்‌, துணை ஆணையாளர்‌
திரு.கோபால்‌. (மோட்டார்‌ வாகனப்பிரிவு), காவல்‌ அதிகாரிகள்‌ மற்றும்‌ காவல்‌ ஆளிநர்கள்‌
கலந்து கொண்டனர்‌.